Tamil Song - 76 - Thanthaanai Thuthippomey

தந்தானைத் துதிப்போமேதிருச்
சபையாரே கவிபாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1.. ஒய்யாரத்துச் சீயோனேநீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2.கண்ணாரக் களித்தாயேநன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3.சுத்தாங்கத்து நற்சபையேஉனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. தூரம் திரிந்த சீயோனேஉனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை

5. சிங்காரக் கன்னிமாரேஉம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை