Tamil Song - 114 - Kandeynen Kan kulira

கண்டேனென் கண் குளிர
கர்த்தனையின்று கண்டேனென் கண் குளிர
கொண்டாடும் - விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி - கண்டே

1.பெத்தலேம் - சத்திர முன்னணையில்
உற்றோர்க்கு - உயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை

2.தேவாதி தேவனை - தேவ சேனை ஓயாது
தோத்தரிக்கும் ஒப்பு நிகர் அற்றவனை

3.அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறியாப்பசுவில் புல்லணையில் உன்னழகை

4.பார் வேந்தர் - தேடி வரும் பக்தர் பரனை
வேந்தர் - அடி தொழும் அன்பனை என் இன்பனை நான்

5.அண்டினோர்க் - கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக்

6.மண்ணோர் - இருள் போக்கும் மா மணியை

விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக்  கண்மணியை