Tamil Song - 130 - Pavani Selkintrar Raasaa

பவனி செல்கின்றார் ராசா - நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அவனிதனிலே மறிமேல்
ஏறி ஆனந்தம் பரமானந்தம்!

1.எருசலேமின் பதியே - சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! - பவனி

2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர்
மனுவின் சேனை நாதம் கீதம் ஓத!

3.குருத்தோலைகள் பிடிக்க - பாலர்
கும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய்

ஓசன்னவென்று போற்ற மனம் தேற்ற!