Tamil Song - 136 - Devanukkey Makimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
என்னைத் தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை!

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க(2)

1.உன்னதத்தில் தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும் (2)
இந்த பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் (2)

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க (2)

2.செவிகளை நீர் திறந்துவிட்டீர்
செய்வோம் உம் சித்தம் (2)
இந்தப் புவிதனிலே
உம் விருப்பம் பூரணமாகட்டுமே (2)

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க (2)

3.எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே -2
எங்கள் ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே (2)

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க (2)

4.தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் (2)
இங்கு பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே (2)


ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க (2)