Tamil Song - 153 - Kumpidukiren Naan

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்!

1.அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்!

2.நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்!

3.தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன்  - நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்!

4.உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்!

5.ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்!

6.திருவுருவானவனைக்கும்பிடுகிறேன் - தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்!

7.குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்!

8.அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் - என

தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்!