Tamil Song - 184 - Unnathamaanavar Sarva Vallavar

உன்னதமானவர் சர்வ வல்லவர்
நிகரில்லாதவர் நித்தியமானவர் - 2
சாவை வென்று உயிர்த்தவர் - முழு
அகிலம் வணங்கும் ஆண்டவர்
என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் - 2
பாடு ! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
மகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது - 2

1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்
உண்மையுள்ளவர் ஊர்விட்டு வாவெனக்
கூட்டிச் சென்றவர் உத்தமம் அணிந்தவர்
காடை, மன்னா! மதுரமான நீர்! தந்தவர்
அற்புதர் கானான்நாட்டைச் சேரும்வரையிலும்
துணையாய் வந்தவர் அவர் ஆதரவானவர் - 2

2.அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம்
செய்யாதவர் திடமனம், தைரியம்,
பெலன் தரும் அவரே அதிசயமானவர் - 2
குழவிகள் அனுப்பி எதிரியைத் துரத்தி
 ஜெயத்தை தந்தவர்
அர்ப்பணம் நித்தம் தொடர்கின்றபோது
உயர்வை அளிப்பவர் அவர் ஒப்பில்லாதவர் - 2

3.காலங்கள்தோறும்செயல்படும்அவரே சரித்திர நாயகர்!
வாலிபர், அறிவர், மேதைகள் உள்ளம் கொள்ளை கொள்பவர்
அகண்ட இப்பூமி முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர்
மா திரளாய்த் தம் சீடர்கள் பெருக்கிடும்

இயேசு நல்லவர் அவர் என்றும் வல்லவர் - 2