Tamil Song - 228 - Naan Unnaivittu Vilakuvathillai

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

1.பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான் நடத்திடுவேன்

2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

3.நீதியின் வலக்கரத்தாலே - உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்
உண்மையாய் ஜெபித்திடுவாய் - தினம்

அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்