Tamil Song - 229 - Enthan Yesu Enaku Nallavar

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் மூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்எந்தன்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ ஸ்நேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரேஎந்தன்

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அநுதினம் என்னை வழி நடத்தும்எந்தன்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்

நான் அவருடன் பறந்திடுவேன்எந்தன்