Tamil Song - 313 - Motcha Yaaththirai Selkirom

மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள்இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே அனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2.சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமேதம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே

3.ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்

4.மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்

5.கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையேஇக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

6.ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்

எக்காள தொனியுடன் வருகிறார்