Tamil Song - 318 - Aamen Alleyluyaa


ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா;
ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா

1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தானத்தைச் சங்கரித்து - முறித்து;
பத்ராசனக கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத் தரித்து , முடித்தார் --- ஆமென்

2. வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி,
மீட்டுக் கரையேற்றி - பொய்மாற்றி,
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் --- ஆமென்

3.சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது --- ஆமென்

4.தேவ கோபந்  தீர்ந்து - அலகையின் 
தீமை எலாஞ் சோர்ந்து, முடிந்தது
ஆவலுடன் சேர்ந்து - பணிந்து

கொண்டாடும், களி கூர்ந்து மகிழ்ந்து