Tamil Song - 359 - Yesuvin Anpinai Ariviththida

இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம்

நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய்மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே

1.நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதபித்தார் (2)   
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ (2)

2.காலங்கள் கடந்திடுதே
நம் வேதமும் நிறைவேறுதே (2)
இயேசுவின்  வருகையின்று அதி சமீபமாகிறதே (2)
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்

நற்செய்தி சுமந்து புறப்படுவோம்!