Tamil Song - 364 - Parisuththa aaviye Vaarumaiyaa

பரிசுத்த ஆவியே வாருமையா
பரலோக பலத்தால் நிரப்புமையா – 2

1.அனுதின வாழ்வில் பரிசுத்தனாக
விளங்கிட எந்தனுக்குதவுமையா – 2
அனலாவியாலே அடியேனை நிரப்பி
அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா – 2 பரிசுத்த

2.உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு
உயர்வான இலட்சியம் தாருமையா
உலகினை மறந்து உந்தனை நோக்கி

அனுதினம் ஓடிட உதவுமையாபரிசுத்த