Tamil Song - 389 - Kaal Mithikkum

கால் மிதிக்கும் தேசமெல்லாம்  என்
காத்தருக்கு சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1.பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் அல்லேலூயா

2.எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று

3.செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை

4.திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்

அபிஷேக திருச்சபைகள்