Tamil Song - 408 - Anpe Pirathaanam

அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்

1.பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்

2.பலபல பாஷை - படித்தறிந்தாலும்
கலகல வென்னும் - கைம்மணியாமே

3 என் பொருள் யாவும் -ஈந்தளித்தாலும்
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை

4.துணிவுட னுடலைச்
சுடக்கொடுத்தாலும் பணிய வன்பில்லாற் - பயனதிலில்லை

5.சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள

6.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

7.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது - தீமை செய்யாது

8.சகலமும் தாங்கும் - சகலமும் நம்பும் மிகைபட வென்றும்

மேன்மை பெற்றோங்கும்!