Tamil Song - 468 - Naan Yesuvin Oliyil

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
இராப் பகலை ஒழுங்காய்க் கடக்கிறேன்
என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
இயேசு இரட்சகர் பின்னே

நடக்கிறேனே இரட்சகருடனே
கடக்கிறேனே கரம் பிடித்தே
விழிப்பாயிருந்து ஜெயங் காண்பேனே
ஒளியில் நடக்கிறேனே

2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் காரிருள் மூடினும் பயப்படேன்
சீயோன் கீதம் பாடி செல்வேனே
ஆ என் இயேசுவின் பின்னே

3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
வீண் பாவங்களை விடுகிறேனே
என் இயேசுவின் பின்னே

4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
நோய்வாய்ப்பட்டாலும் நடப்பேனே
தூயன் இயேசுவின் பின்னே

5. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
முன்னோடின அவரை நோக்குகிறேன்
வன் சிலுவை எடுத்துச் செல்வேனே

என் இயேசுவின் பின்னே