Tamil Song - 491 - Yesuvaip Pinpatrum

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?

1. எல்லாவற்றையும் விட்டுவா - நீ வா
எல்லாவற்றையும் விற்றுவா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி பாழாய்
போய்  விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

2. ஆசைகள் அனைத்தையும்
அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில்
பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

3. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற
வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும்
வந்தேன் தந்தேன்

இயேசுவைப் பின்பற்றுவேன்!