Tamil Song - 495 - Paathaikkuth Theepamame

பாதைக்குத் தீபமாமே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல

1.பாதைக்குத் தீபமே, பாவிக்கு லாபமே
பேதைக்குத் திரவியமே, பரிசுத்த
ஆகமம் . . . மா நல்ல ஆகமம்

2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமே
வான பிதாவின் வாக்கே பரிசுத்த
ஆகமம் . . . மா நல்ல ஆகமம்

3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர்                       
செல்வமே,
ஓதரும் மேன்மையாமே பரிசுத்த
ஆகமம் . . . மா நல்ல ஆகமம்

4. ஞான சமுத்திரமே, நல்ல
சுமுத்திரையே,
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்
. . . மா நல்ல ஆகமம்

5. உலகோர்க் குயிர்த்துணை, உண்டோ
அதற்கிணை?
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த
ஆகமம் . . . மா நல்ல ஆகமம்                  

6. எல்லையில்லா விஸ்தாரம், எவர்க்கும்
பர மாகாரம்,
வல்ல பரனின் வேதம் பரிசுத்த ஆகமம்

. . . மா நல்ல ஆகமம்