Tamil Song - 516 - Oppatra En Selvame

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் - நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன் - நான் (2)

2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா - என் (2)

3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசுதான்
தொடர்ந்து ஓடுவேன்

தொல்லைகள் என்ன செய்யும் - ஆ (2)