Tamil Song - 579 - Yesuvin Janam

இயேசுவின் ஜனம் நாம்
பரிசுத்த ஜாதி நாம் பயமினி நமக்கென்ன?
பரிசுத்தர் அவர் நம்மை நடத்திடுவார்

1.பாவியின் பயமெல்லாம்
நீக்கிடுவார் ஆ . . . ஆ . . . ஆ (2)
பாவச் சங்கிலிகளைத் தகர்த்திடுவார்
பாவியைத் தம் அண்டை அணைத்திடுவார்  (2)

2.துணை அவரே துயர்
வந்திடினும் ஆ . . . ஆ . . . ஆ (2)
துடைப்பார் கண்ணீர் சுகமளிப்பார்
தூய சௌபாக்கியம் கொடுத்திடுவார்

3.சுற்றிலும் சத்துரு
சூழ்ந்திடினும் ஆ . . . ஆ . . . ஆ (2)
வியாகுலம் நம்மை விரட்டிடினும் கண்மணிபோல்அவர்காத்திடுவார்(2)

4.துன்பங்கள் பலவாய்
நெருக்கிடினும் ஆ . . . ஆ . . . ஆ (2)
தொல்லைகள் நம்மை அணுகிடினும்
நல்லவர் அவர் நம்மைத்
தேற்றிடுவார் (2)

5.குறைவுகள் யாவையும் 
தீர்த்திடுவார் ஆ . . . ஆ . . . ஆ (2)
களங்கம் இல்லாதவர் நிறுத்திடுவார்
கடைசி மட்டும்

கைவிடாதிருப்பார்  (2)