Tamil Song - 660 - Magane Un Nenjsenakkuth

மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? - மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

1. அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே (2) - பாவ
அழுக்கை நீக்கி அருள்
கொடுப்பேனே (2)

2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே (2) - அதை
உண்மையாய்  அகற்ற நான்
மரித்தேனே

3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? (2) - நித்ய
பரகதி வாழ்வை இன்றே
தேடாயோ?

4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே (2) - மகா
உவப்பாய்க் கதி ஈவேன்
மகிழ்வாயே

5. உந்தன் ஆத்துமத்தை நீ
படைப்பாயே (2) - அதில்
ஊக்கமாய் வசிக்க இடம்

கொடுப்பாயே !