Tamil Song - 664 - Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம்
தேவ குமாரனின் நாமம் (2)
இயேசு என்னும் நாமம் - அதுவே
என்னை மீட்கும் நாமம்

1. பாசம் கொண்ட நாமம் -
என்னை பார்த்தழைத்த
நாமம்
பாவம் செய்ய தடுத்து நிறுத்தும்
பரமன் இயேசு நாமம்

2. நன்மை செய்யும் நாமம் -
எங்கள் நாதர் இயேசு
நாமம்
தீமை செய்ய தடுத்து நிறுத்தும்
தூயர் இயேசு நாமம்

3. உதவி செய்யும் நாமம் - கர்த்தர்
இயேசு கிறிஸ்து நாமம்
உன்னை என்னை மீட்கவே
உலகில் வந்த நாமம்

4. வழிநடத்தும் நாமம் - எங்கள்
வல்ல இயேசு நாமம்
பாதை தவறி நடக்கும்போது
பாதை காட்டும் நாமம்

5. இதயத்திலே தங்கி வாசம்
செய்யும் இயேசு நாமம்
நம் இருதயத்தையே நிறுத்துப் பார்த்து

திருத்தச் சொல்லும் நாமம்