Tamil Song - 705 - Aazhaththil Azhaththil Veruntruvom

ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
உயரத்தில் கனி கொடுப்போம்
நூறும் அறுபதும் முப்பதும்
மேனியாய்
விளைச்சலைக் கண்டடைவோம்

1. வசனத்தை நேசித்து நாம்
வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்
கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்
தேடிடும் கனி தருவோம் - ஆழத்

2. வசனமாய்  வந்த இயேசு
திராட்சை செடி நான் என்ற
இயேசு
அவரோடு சேர்ந்திடுவோம் - நல்ல
கனிதரும் கொடிகளாவோம்-ஆழத்

3. கனிதந்து வாழ்ந்திடுவோம்
கனிதரா அத்திபோல்
ஆகவேண்டாம்
மீண்டும் ஓர் ஆண்டு அவர் -
தந்தால்

கனிதந்து வாழ்வோமே நாம் -ஆழத்