Tamil song - 729 - Paatham Ontre Vendum

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும்
வேண்டாம்

1. நாதனே துங்க மெய்  - வேதனே
பொங்குநற் காதலுடன் துடீநுய
தூதர் தொழுஞ் செய்ய

2. சீறும் புயலினால் - வாரிதி
பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்
நீர் மேல் நடந்த உம்

3. வீசும் கமழ்  கொண்ட
வாசனைத் தைலத்தை             
ஆசையுடன் - மரி - பூசிப்
பணிந்த பொற்

4. போக்கிடமற்ற எம்
ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற்

5. நானிலத்தோர் உயர் - வான் நிலத்
தேற வல் ஆணி துளைத்திடத்
தானே கொடுத்த உம்

6. பாதம் அடைந்தவர்க்
காதரவாய்ப் பிரசாதம்
அருள் யேசு - நாதனே என்றும்

உன்!