Tamil Song - 771 - Muthalaavathu Ethilum

முதலாவது! எதிலும் முதலாவது!
எங்கும் முதலாவது!
இயேசுவே முழு முதலாவது!
முதல் முதலாவது முழு முதலாவது! - 2
எதிலும் எங்கும்
முதல் முதலாவது - 2
என்றென்றும் இயேசுவே
முழு முதலாவது - 2

1. ஆரம்பம் நீர்தானது
ஆக்கல் உம் செயல்தானது
ஆளுமை மேலானது! - உம்
மாட்சிமை இணையற்றது!
ஞாலமும் உமதாமே
அகிலமே உமதாமே - 2
என்றும் எல்லாமே
உம் சொந்தமானதே -
முதல்

2. வாழ்வு உமதானது
ஆற்றலும் நீர் அளிப்பது
என் ஆசை நீர் தானது!
அழகும் நீர் தந்தது!
அறிவும் நீர்தாமே
வெற்றியும் நீர்தாமே - 2
மகிழ்வும் வளமும்
நீரன்றி வேறேது
- முதல்

3. இயேசு நீர் வாழ்கவே
என் இதயத்தில் நீர் வாழ்கவே
சிந்தையை நீர் ஆளுமே
என் தேகமும் உமதாகுமே!
ஆவி புகழ்பாட எல்லாம் நீராக - 2
தரணியின் மனிதரெல்லாம்
உம்பாதம் சரணாக -

முதல்