அவர் எந்தன் சங்கீதமானவர் பாடல் வரிகள்அவர் எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1.துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும்
தேவன் அவரே (2)
வேண்டிடும் பக்தர்களின்
குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே (2)

2. இரண்டு மூன்றுபேர்
எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால்
அவர் நடுவில் (2)
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும்
வாழ்த்திடுவோம் (2)

3. வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும்
வாழ்த்திடுவோம் (2)
வருகையில் அவரோடு
இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்

போற்றிடுவோம் (2)