உயர உயர உயர நீயும் பறப்பாய் பாடல் வரிகள்உயர உயர உயர நீயும் பறப்பாய்                      
புது நியமத்திலே என்றும் நீயும் வாழுவாய்   
களைந்திடு களைந்திடு
பழைய நியமத்தை நீயும் களைந்திடு

புகுந்திடு புகுந்திடு புதிய நியமத்தில் நீயும் புகுந்திடு (2)

1. கொலை செய்யும் எவனும் கொலை
செய்யபடுவான் என்பது  மோசேயின் நியமனம்
விண்ணக வாழ்வை நாமும் வாழ
இயேசு நல்கின புது நியமனம்
உள்ளத்திலே கோபம் பிறப்பிக்கும் சொற்கள்      
உன்னை கொண்டு செல்லும் நரகம்  (2)       - உயர


2.விபச்சாரம் செய்தால் கல்லெறியப்படுவான்
என்பது மோசேயின் நியமனம்
ஸ்திரீயை இச்சையாய் பார்ப்பவன் எவனும்
விபச்சாரம் செய்தான் என்றார் இயேசு
கண்களின் இச்சை உள்ளத்தில் விபச்சாரம்     
உன்னை கொண்டு செல்லும் நரகம்   (2)      உயர  


3 .சிநேகிதனை நேசித்திடு பகைவனை
பகைத்திடு என்பது மோசேயின் நியமனம்
தீமையை நன்மையால் வெல்லுங்கள் என்பது
இயேசு திறந்த புதிய மார்க்கமே
பிறரின் தப்பிதம் மன்னியாதிருந்தால்         

பிதா நம் பாவத்தை மன்னிப்பதில்லை (2)  -  உயர