Thuyathi thuyavarey Tamil Songs Lyrics


தூயாதி தூயவரே
உமது புகழை, நான் பாடுவேன்-(2)

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின்
புகழ் பாட வேண்டும்  (2) – தூயாதி


1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம்
கழுவினீரே (2)  – தூயாதி


2.பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே (2)தூயாதி


3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தந்தீரே (2)தூயாதி


4.தம் ஜீவன் எனக்காக தந்தவரே
என்னையே பலியாக ஏற்றிடுமே  (2) - தூயாதி


5. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமேதூயாதி