Tamil Song - 4 - Potriduvom Pugazhnthiduvom

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே

1.தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம்போற்றிடுவோம்

2.காண மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமேபோற்றிடுவோம்

3.ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத்தான் சுதராய்போற்றிடுவோம்

4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரேபோற்றிடுவோம்

5.சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலதில்போற்றிடுவோம்