Tamil Song - 30 - Soththiram Paadiye Pootriduven

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே

2.ஜோதியாய் வந்த அன்பே
பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே

3.மாய உலக அன்பை - நம்பி மாண்ட  
என்னை கண்டழைத்த   அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே

4.ஆதரவான அன்பே - நித்தம் அன்னை போல்
என்னையும் தாங்கும் அன்பே
 உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வவல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே