Tamil Song - 78 - Yesuvin Naamamey

இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1.காசினியில் அதனுக்கிணையில்லையே - விசுவாசித்த
பேர்களுக்குக்  குறையில்லையே (2)

2.இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் (2)

3.உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்தநாமம் (2)

4.விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - நமை
அண்டிடும்பேய் பயந்தோடும் தேவநாமம் (2)

5.பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்

பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி (2)