Tamil song - 121 - Ummai Uyarththi Uyarththi

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம்  துள்ளுதையா

1.கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (4) - உம்மை

2.கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3.நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4.இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5.வலுவூட்டும் திருஉணவே

வாழ வைக்கும் நல்மருந்தே!