Tamil Song - 97 - Nantripali Nantri Pali

நன்றிபலி நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் (அதிகாலை) ஆனந்தமே
என் அப்பா உம் திருப்பாதமே

1.நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி தேவா (3)

2.இரவெல்லாம்  காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே - இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன் - கோடி

3.ஊழியப் பாதையிலே
உற்சாகம்  தந்தீரையா  
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம்  தந்தீரையா - நான்

4.வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும்வாழ்வேனையா-இயேசு

5.ஜெபத்தைக் கேட்டீரையா
 ஜெயத்தைத் தந்தீரையா
 பாவம் அணுகாமலே பாதுகாத்து தந்தீரையா

6.என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்

உந்தன் பெருமை தானே