Tamil Song - 152 - Soththiram Soththiramey

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி என்னை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே

2.கோடா கோடி தூதர்கள்
சபை கூடி நடனமாடி
பாடி உம்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத் துதிப்பேன்

3.கன்னியர் கீதம்பாடி இயேசு
மன்னவனையே போற்றி
உன்னி யும்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத் துதிப்பேன்

4.பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன்
இயேசுவையே பாடி உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத் துதிப்பேன்

5.மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
 ஆர்ப்பரித்து துதிக்க - அடியானும்
உம்மைத் துதிப்பேன்

6.பூமியின் தாவரங்கள்
புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து
நாதா உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத் துதிப்பேன்

7.தாழ்த்தித் தலைகுனிந்து - ரத்த
சாட்சிகள் கூட்டமெல்லாம்
வாழ்த்தி உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத் துதிப்பேன்

8.ஆயிரம் நாவிருந்தால் - அன்பரைப்
பாடியே ஸ்தோத்தரிப்பேன்
ஆவியில் நான் நிறைந்து - எந்தன்
அண்ணலிடம்   சொல்லுவேன்

9.கேரூபின் சேராபீன்கள் - உடல்
செட்டைகளால் மூடி
நேராய் உம்மைத் துதிக்க - நீசன்
யானும் உம்மைத் துதிப்பேன்

10.வானத்தின் ஜோதி எல்லாம்
தேவ மைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப்

பாவியானும் உம்மைத் துதிப்பேன்