Tamil Song - 303 - Uirththeyzhunthaarey

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்த தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த மானாரே

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவேஉயிர்த்தெழுந்தாரே

1.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதேஉயிர்த்தெழுந்தாரே

2.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமேஉயிர்த்தெழுந்தாரே

3.மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெயங்மெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்உயிர்த்தெழுந்தாரே

4.ஆவியால் இன்றும் என்றும்
! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஉயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

5.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக

எழும்புவோமே மகிமையிலேஉயிர்த்தெழுந்தாரே