Tamil Song - 333 - Vallamai Devai Devaa

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்   
தீர்க்க தரிசனம் சொல்வாரே

2.பெந்தேகொஸ்தே நாளில் போல
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்

3.மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாக ஆவிதாரும்
பிதாவே என்று அழைக்க

புத்திர சுவிகாரம் ஈந்திடும்