Tamil Song - 655 - Mannippu Mannippu

மன்னிப்பு மன்னிப்பு
மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்புத் தாருமே -
இறைவா மன்னிப்புத் தாருமே
இறைவா

1. ஆண்டவர் ஆன்மாவை
விரும்புகின்றார் மாண்டிட்ட
ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு
அருளுகின்றார் - நேரில்
வேண்டிடும் துரோகிக்கு
இரங்குகின்றார்

2. என் சொத்தை தந்திடும்
என்று கேட்டான்
தன் சொத்தைப் பெற்றவன்
பயணமானான்
தன் இஷ்டம் போலங்கே செலவு
செய்தான் - அவன்
தன் வாழ்வைப் பாவத்தில்
மூழ்கடித்தான்

3. பன்றிகள் மேய்த்தவன்
தவிடு உண்டான்
தன் தந்தை அன்பினைக்
கனவு கண்டான்
மன்னிப்பு கேட்டங்கே
ஓடிவந்தான் - தந்தை
மன்னித்து மகனாக
அணைத்து ஏற்றார்

4. ஆண்டவர் ஞானத்தில்
இனிமையுண்டு
கண்டிக்க காலத்தைக்
கடத்துகின்றார் கண்டித்து
கருணைசொல் கூறுகின்றார் -
பாவி
திருந்திட அருட்கொடை
வழங்குகின்றார்

5. குற்றங்கள் இல்லையே
என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி
நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும்
எடுத்துரைத்தால் - தேவன்

குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்!