இறைவார்த்தை அகிலத்தை
வெல்லும்
என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்
எரிந்தே ஜொலிக்கும்
ஆல்போல் அது தழைக்கும்
அலைபோல அது பரவும்
ஆதவனின் சுடர்போல
அகிலம் எட்டும்
ஆகாயம் தொடுந்தூரம்
தேவ புகழ்
ஓங்கும் (2)
அற்புதம் அது தொடர்கதைதான்
ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (2)
1. சீடர்களாய்
ஆர்ப்பரிக்கும்
கூட்டம் பெருகும் (2)
தியாக குணம் சபைதோறும்
வளர்ந்தென்றும் ஓங்கும் (2
அன்பும் அர்ப்பணமும்
செழித்தோங்கிடும்
தாயகம் அசைந்திடும்
தேவனின் வார்த்தை
பலன் தந்திடும் - நம் (2)
2. நண்பர்களாய்
நற்செய்தி
சுமந்தெங்கும் செல்ல (2)
ஜெபதூபம் அணையாமல்
வருகை மட்டும் நிலவ (2)
விண்மீன்களாய் சபைகள் பெருக
அகிலமே தலை வணங்கும்
தேவனின்நாமம் மகிமைப்படும்-
நம்(2)
3. ஒலி அலையாய்
ஒளி அலையாய்
உமது நாமம் பரவும்! (2)
நன்நடத்தை வாழ்
மொழியால்
உமது அழகு விளங்கும் (2)
சாட்சியிடும்
வாழ்க்கையினால்
சத்தியம் ஊடுருவும்
தேவனின்ஆட்சி
செழித்தோங்கிடும் -நம் (2)