ஆசீர்வாதங்கள் அன்று போதும்
ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள்
இன்று வசனமே போதும்
வரங்கள் நாடி ஓடினேன்
இன்று வரந்தருவோன் போதும்
வியாதி நீங்க தேடினேன்
இன்று வைத்தியர் இயேசுவே போதும்
என்றென்றும் கிறிஸ்துவே
இயேசுவையே பாடுவேன்
எல்லாவற்றிலும் கிறிஸ்துவே
எனக்கெல்லாம் அவரே
நானாகவே போராடினேன்
இன்று நல்லவரை நம்புகிறேன்
அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன்
இன்று அதிகமாயண்டிக் கொண்டேன்
தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன்
இன்று அவரே பிடித்துக் கொண்டார்
அலைபாய்ந்த என் வாழ்க்கையில்
அசையா நங்கூரமானார்
துரிதமான என் திட்டங்கள் தொலைந்து
இன்று நம்பி ஜெபிக்கிறேன்
எனது கவலை கலக்கம் எல்லாம்
இன்றவர் ஏற்றுக் கொண்டார்
என் விருப்பமே விழைந்திட்டேன்
இன்றவர் சொல்வதே என் விருப்பம்
விடாப்பிடியாய் கேட்டுக் கொண்டேன்
இன்று விடாமல் துதிக்கிறேன்
என் வேலையே என் விருப்பம்
இனி எல்லாம் அவர் விருப்பம்
அன்று அவரை உபயோகித்தேன்
இன்றென்ன்னப் பயன்படுத்துகிறார்
முன்பு வல்லமை வாஞ்சித்தேன்
அவ்வல்லவர் இன்று போதும்
நானாகவே உழைத்திடேன்
இன்று இயேசுவுக்காகவே
அன்று இயேசுவை நம்பினேன்
இன்றென்னுடையவரே
முன்பென் வெளிச்சம் மங்கியது
இன்றோ பிரகாசிக்கிறது
முன்பு சாவுக்காய் காத்திருந்தேன்
இன்றவர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்
என் நம்பிக்கைகள் அவரெல்லைக்குள்
நங்கூரப்பட்டுள்ளது