நான் கிறிஸ்துவுக்குப் பைத்தியக்காரன் - Naan Kiristhuvuku Paiththiyakaaran


நான் கிறிஸ்துவுக்குப் பைத்தியக்காரன் 
நீ யாருக்கு?
வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை 
என்று தள்ளிடு 
நீ துடைத்துப்போடும் ஆழுகைப்போல் காணப்பட்டாலும் 
வீண் வாழ்வுக்காக ஒதுக்கித்தள்ளிடு 

தேவன் முன்னிலே உலக செல்வம் ஆழியுமே 
உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே 
உலக ஞானமே தேவன் பார்வையில் 
உலக பைத்தியம் என்று ஆகுமே 
Whatsapp  பைத்தியம் !
Facebook பைத்தியம் !
Youtube பைத்தியம்! -எதற்கு நீ பைத்தியம் 
TV  பைத்தியம் !
Serial பைத்தியம் !
Movie பைத்தியம்! - நீ எதற்கு பைத்தியம் 

கடவுள் பைத்தியம் என்று சொல்வது 
உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே 
சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும் 
மீட்கப்படுவோர்க்கு அது தேவா பெலனாகும் 
Car BIke பைத்தியம் !
Video Game பைத்தியம் !
Selfie பைத்தியம் - எதற்கு நீ பைத்தியம்!
Music பைத்தியம் !
Outing  பைத்தியம் !
Cricket  பைத்தியம் ! - நீ எதற்கு பைத்தியம் ?

பெலவான்களை வெட்கப்படுத்தவே 
பெலவீனரை தேவன் தெரிந்து கொண்டாரே 
ஞானவான்களை பைத்தியமாக்கவே 
பைத்தியம் எங்களை தேவன் தெரிந்துக் கொண்டாரே 
மண்ணாசை பைத்தியம் !
பெண்ணாசை பைத்தியம் !
பொன்னாசை பைத்தியம் !- எதற்கு நீ பைத்தியம்?
மனுச புகழ்ச்சி பைத்தியம்!
உலக மேன்மை பைத்தியம் !
சிற்றின்ப பைத்தியம்! - நீ எதற்கு பைத்தியம் ?

தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே 
வாழ்ந்து நானுமே அவர் சாட்சியாகவே 
ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும் 
வாழ்வும் இயசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே