Tamil Song - ஆயிரம் ஆயிரம் நன்மைகள் ( Aairam aairam nanmaigal)


ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் 
அன்பும் கொண்டீரே-2

நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை-2

1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்-2
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே-2. 

2.மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்-2
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே-2