Tamil Song - என்னில் நினைவானவரே ( Ennil Ninnaivaanavare)


என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா
நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம்
நான் நம்புவேனைய்யா-2

1. தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே-2
உன்னை எந்தன் உள்ளங்கையில்
வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும்
நினைத்திடுவேனே-2

2. இமைப்பொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்-2
மலைகள் விலகி பர்வதங்கள்
நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு
விலகிவிடாது-2

3. உன் தாய் உன்னை தேற்றிடும்போல
நான் உன்னை தேற்றிடுவேனே-2
தண்ணீரைக் கடக்கும் போதும்
உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
கூடவே நடப்பேன்