Tamil Song - நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் ( Neere vazhi saththiyam neere jeevan)


நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறே
ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்-2
விண்ணிலும் மண்ணிலும் மெய்
நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா-2

1.கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான
ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்
என்றால் நீர் தானைய்யா-2
ரூபமும்
உமக்கில்லை சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

2.உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர்- 2
படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா-2

3.எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே-2
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி-2a