Tamil Song - திரிமுதல் கிருபாசனனே,சரணம்!

1.திரிமுதல் கிருபாசனனே,சரணம்!
 ஜெகத்தல ரட்சகன் தேவா, சரணம்!
  தினம் அனுதினம் சரணம்;- கடாட்சித்
 தினம் அனுதினம் சரணம்,

2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்,
 நமஸ்கரி  உம்பர்கள் நாதா ,சரணம் !
நம்பினேன் இது தருணம் ;- தருணம் 
நம்பினேன், தினம் சரணம்,

3.  அருவுருவ அருள் அரசே ,சரணம்!
 அன்று இன்று என்றும் உள்ளாய் சரணம்!
 அதிகுணனே, தருணம் -கிரணமொளிர்
 அருள் வடிவே, சரணம்,

4. உலகிட  மேவிய உனதா,சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே, சரணம் ஒளி 
அருள்வாய் ,தருணம் மனுவோர்க்கு 
உத்தமனே ,சரணம்;

5. நித்தியம தோத்திர நிமலா, சரணம்!
 நிதி இஸ்ரயேலரின் அதிபதி, சரணம்!
 நீதா, இது தருணம் -கிருபைக்கொரு
ஆதாரா, சரணம்