Tamil Song - உம் அன்பில உம் அன்பில


உம் அன்பில உம் அன்பில என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில உம் மார்பில - என்றும் சாய்ந்திடுவேன்

1.வாழ்வு முடிந்திடும் மண்ணில 
உம்மிடம் சேர்வேன் விண்ணில 
திருப்தி அடைவேன் நித்தியமாய் 
உம் மடியினில அந்நாளினில - உம் அன்பில

2.உம்மை சேரும் நேரத்தில
கண்ணீர் மறையும் கண்களில
உமது வார்த்தை உசுருபோல
கலந்திட்டது எனக்குள்ள
உலகில் பட்ட பாடுகளை
மறப்பேன் உம் அரவணைப்பல
உம்மையன்றி பூமியில வேறு யாரும் எனக்கு இல்ல 
- உம் அன்பில

3.சூரியன் அங்கு தேவையில்லை 
உமது மகிமை இருக்கையில
ஏதேன்தோட்ட பரிமாணம் மீண்டும் தொடரும் அந்த கணம்
என்னை மீட்க பட்ட காயம் 
காண துடிக்குது என் இதயம் 
எனது ஏக்கமோ நான் அங்கே 
நித்தியமாய் தங்கதானே - உம் அன்பில